0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான ஆலோசனை
எங்கள் ஆலோசனை அமர்வுகள் நேரில் நடைபெறும். ரகசியத்தன்மை முற்றிலும் பாதுகாக்கப்படும். பெர்ன் மாகாணத்தில் சுமார் 200 இடங்களில் நாங்கள் ஆலோசனை அமர்வுகளை நடத்துகிறோம். இந்த அமர்வுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இளம் குழந்தைகளுக்கான ஆலோசகர்கள் பிரத்தியேகப் பயிற்சி பெற்றவர்கள். மேலும் மேலதிகப் பயிற்சியைத் தொடர்ந்து பெறுபவர்கள். மற்றவர்களிடம் பேசுவது எப்படி, மற்றும் நல்ல முறையில் அறிவுரை சொல்வது எப்படி என்பதை அறிந்தவர்கள். இவர்கள் விரிவான நிபுணத்துவ அறிவைக் கொண்டவர்கள் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாள்வதில் சிறந்தவர்கள்.
ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?
உதாரணமாக:
- பெர்ன் மாகாணத்தில் குழந்தைப் பராமரிப்பு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? வித்தியாசமாக என்னென்ன செய்யப்பட்டுள்ளன?
- பிளே குரூப்கள், பகல்நேர குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் கிண்டர்கார்டன் குறித்து மேலும் எங்கே தெரிந்துகொள்ளலாம்?
- எனது குழந்தைகளுக்கு ஈடுபட என்னென்ன செயல்பாடுகள் உள்ளன?
- பெர்ன் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கின்றன?
- குடும்பங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?
- சுவிஸ் ஹெல்த்கேர் அமைப்பு குறித்த கேள்விகள்.
- குழந்தைக்கான ஊட்டச்சத்து குறித்த கேள்விகள்.
- உங்கள் குழந்தைக்கான மொழிப் பயிற்சி தொடர்பான உதவிக் குறிப்புகள்.
- போன்றவை.
ஆலோசனை தொடர்பான பிற தலைப்புகள்
தாய்ப்பால், ஊட்டச்சத்து, பராமரிப்பு, சுகாதாரம், வளர்ச்சி, குழந்தையின் பதற்றம், தூக்கம், அழுகை, உடன்பிறந்தவர்கள் அல்லது குடும்பப் பிரச்சினைகள் போன்ற த விஷயங்களில் எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். நாம் ஒன்றாக இணைந்து தீர்வு காணுவோம். நீங்கள் எங்களை தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம். தேவைப்பட்டால், எங்களால் உங்கள் வீட்டிற்கே வந்து ஆலோசனை வழங்க முடியும்.
ஜெர்மன் மொழி பேசத் தெரியாதா? சிறிதளவே ஜெர்மன் பேசத் தெரியுமா?
உங்களுக்காக மொழிபெயர்க்கும் ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால், ஆலோசனை அமரவிற்கு அவரையும் உங்களுடன் அழைத்து வாருங்கள். உங்களுக்கு யாரையும் தெரியாது என்றாலும் பரவாயில்லை, எங்களைத் தொடர்புகொள்ள இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். உங்களுக்காக, கட்டணமின்றி ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்கிறோம்.
முன்பதிவு செய்ய வேண்டுமா?
நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்வோம்.
எங்கள் சேவைகளுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது, முற்றிலும் ரகசியமாக நேரடி ஆலோசனை வழங்கப்படும்.
தொடர்பு
031 552 16 16
திங்.– வெள்., காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
info@mvb-be.ch